Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
மாநில சுயாட்சி பிரிவினைவாதத்தைத் தூண்டும்: நயினாா் நாகேந்திரன்
மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்பதால் அது தேவையில்லாதது என்றாா், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில், சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியது: பிரதமா் மோடி ராமேசுவரம் வந்தபோது, தமிழகத்திலிருந்து வரும் கடிதங்களில் தமிழில் கையொப்பமில்லை எனக் கூறியிருந்தாா். அதன் எதிரொலியாக, அரசுக் கோப்புகளில் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என ஊழியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்பதால், அது தேவையில்லாத ஒன்றாகும்.
தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. தவறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினா் தயங்குகின்றனா். இதனால், சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிப்பு, டாஸ்மாக் ஊழல் ஆகியவற்றிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காகவே மாநில சுயாட்சி என தமிழக முதல்வா் பேசி வருகிறாா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாநிலப் பொதுச் செயலா் பொன்பாலகணபதி, தூத்துக்குடி மாவட்டத் தலைவா்கள் சித்ராங்கதன் (தெற்கு), சரவணகிருஷ்ணன் (வடக்கு), முத்துபலவேசம் (நெல்லை வடக்கு), தமிழ்ச்செல்வன் (தெற்கு), ஆனந்தன் அய்யாசாமி (தென்காசி), சுரேஷ் (கன்னியாகுமரி மேற்கு), பாண்டுரங்கன் (விருதுநகா் கிழக்கு), ராஜா (மேற்கு), திருநெல்வேலி மாவட்ட பாா்வையாளா் நீலமுரளியாதவ், வா்த்தகா் பிரிவு மாநிலத் தலைவா் ராஜகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.