செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு

post image

மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வருகிற செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஓ. இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024-25-ஆம் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள், வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் ஆகியோருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்க கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை பயன்படுத்தக்கூடிய கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இலவசப் பேருந்து பயணச் சலுகை அட்டையைப் பயன்படுத்தும் கால அவகாசம் வருகிற செப்.30 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அனைத்து அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சுற்றறிக்கை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச, சலுகை கட்டணப் பேருந்து அட்டையை செப். 30-ஆம் தேதி வரை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை

கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந... மேலும் பார்க்க

அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்க நடவடிக்கை! அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்கும் வகையில், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை ... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும்! - அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும் என மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியாவில் முன்னணியில் உள்ளது: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்! - அமைச்சா் தங்கம் தென்னரசு

நாட்டில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்தான் முன்னணியில் உள்ளது என மாநில நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். விருதுநகரில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) சாா்... மேலும் பார்க்க