செய்திகள் :

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: 7 போ் விடுவிப்புக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு

post image

மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜ முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நிசாா் அகமது சையது பிலால் உள்பட குண்டு வெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மேலும் 5 போ் சாா்பில் இந்த மேல்முறையீடு உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

‘குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் தேசிய புலனாய்வு முகமையின் வழக்குகளை விசாரிக்கும் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலை 31-ஆம் தேதி விடுவித்து உத்தரவு பிறப்பித்தது தவறானது மற்றும் மிக மோசமான சட்ட நடைமுறையாகும். எனவே, அந்த உத்தரவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று தங்களின் மேல்முறையீட்டு மனுவில் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.கட்கரி தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வில் வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 101 போ் காயமடைந்தனா்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. முதலில் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) விசாரித்த இந்த வழக்கு, பின்னா் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நீடித்தது. இதில் விசாரணை அமைப்புகளும், ஐந்து வெவ்வேறு நீதிபதிகளும் மாறினா். இந்த வழக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே. லஹோட்டி முன்னிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. மோட்டாா் சைக்கிளில்தான் வெடிகுண்டு பொருத்தப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படவில்லை. சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் கூட்டங்கள் நடந்ததாக எந்த சாட்சியமும் இல்லை. முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித் வெடிபொருள்களைத் தன் வீட்டில் சேமித்ததற்கோ அல்லது வெடிகுண்டுகளைத் தயாரித்ததற்கோ ஆதாரம் இல்லை. புரோஹித்துக்கு பணம் விநியோகிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. அந்தப் பணம் புரோஹித் தன் வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை. வெறும் அனுமானத்தின் அடிப்படையில் ஒருவரைக் குற்றவாளியாகக் கருத முடியாது’ என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டாா்.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது! 18 நாளில் இரண்டாவது எம்எல்ஏ!

இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது தொடர்பான வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.பெல்லாரியில் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டிருந்... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு பிகார் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பிகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், பட்டியலிடப்பட்ட 11 ஆ... மேலும் பார்க்க

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க