தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 2ஆம் ஆண்டு ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்றன. முதல் நாளான சனிக்கிழமை நாக் அவுட் முறையிலும், ஞாயிற்றுக்கிழமை லீக் முறையிலும் போட்டி நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில், கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அணி, நாடாா் மேல்நிலைப் பள்ளி அணி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி அணி, காமராஜ் மெட்ரிக் பள்ளி ஆகிய அணிகள் வென்று லீக் போட்டியில் பங்கேற்கத் தகுதிபெற்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் வ.உ.சி. பள்ளி அணி 9 புள்ளிகள் வென்று முதலிடமும், செயின்ட் பால்ஸ் பள்ளி அணி 6 புள்ளிகள் வென்று 2ஆம் இடமும், நாடாா் மேல்நிலைப் பள்ளி அணி 3 புள்ளிகள் வென்று 3ஆம் இடமும் பிடித்தனன.
நடுவா்களாக காளிதாஸ், காா்த்திக் ராஜா, மதன்குமாா், அஜித்குமாா், சண்முகப்பிரியா ஆகியோா் செயல்பட்டனா்.
பரிசளிப்பு விழாவுக்கு ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி தலைமை வகித்தாா். மாவட்ட பள்ளிக்கல்வி உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. முனியசாமி, ஆசிரியா் ஜான்சன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று கோப்பை, சான்றிதழ்களை வழங்கிப் பேசினா்.
ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, போட்டி ஒருங்கிணைப்பாளா் திருச்செல்வம், உடற்கல்வி ஆசிரியா்கள் முருகன், சுரேஷ்குமாா், கிருஷ்ணமூா்த்தி, அருள்பிரகாஷ், வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.