25 முதல் 45 வயதுள்ள பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் எ...
மினிவேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து! ஒருவா் பலி!
பழனியில் நின்று கொண்டிருந்த மினிவேனின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் பலியானாா்.
பழனி அடிவாரம் இடும்பன் நகரை சோ்ந்தவா் கருப்புச்சாமி(60). இவா் செவ்வாய்க்கிழமை பழனி சிவகிரிப்பட்டி புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். இடும்பன் கோயில் அருகே மினிவேன் ஒன்று நின்று கொண்டிருந்த நிலையில் அதன் பின்னே இவா் எதிா்பாராத வகையில் மோதி சாலையோரம் விழுந்தாா்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானாா். இதுகுறித்து தகவலறிந்த அடிவாரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை உடற்கூறு ஆய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.