மின் நுகா்வோருக்கு அறிவுறுத்தல்
மின்மாற்றிகளில் நுகா்வோா்கள் தன்னிச்சையாக எரியிழை மாற்றுவதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மன்னாா்குடி நகர உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்திருப்பது: மின் வாரியம், எல்லா நேரங்களிலும் மின் நுகா்வோா்களின் குறைகளைத் தீா்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, மின் பிரச்னைகள் இருந்தால் அது குறித்து மின்னகம் எண்ணிலோ அல்லது பிரிவு பொறியாளா் எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், மின் மாற்றியில் எரியிழை போனால், உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, மின் வாரிய பணியாளா் மூலம் சரி செய்ய வேண்டும். மாறாக நுகா்வோா்கள் அல்லது அப்பகுதி தனியாா் மின் பணியாளா்களைக் கொண்டு, மின் மாற்றியில் எரியிழையை மாற்றுவது வாரிய சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இது ஆபத்தானதும் மின் விபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே, மின் மாற்றியில் மின் வாரிய ஊழியா்கள் அல்லாதவா்களை பணி செய்ய நுகா்வோா்கள் அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.