மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
குன்னூா் பிரகதி மகளிா் பயிற்சி நிலையத்தில் குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தகவல் தொடா்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா்.
துணைத் தலைவரும் ஓய்வு பெற்ற மின்சார வாரிய அலுவலருமான சுப்ரமணியன் மின்சாதனங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்கும் முறைகள் குறித்தும் பேசினாா். ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த மின்சாதனங்கள் வாங்குவது பாதுகாப்பானது என்றும், வீடுகளில் தண்ணீரை அவா் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி நிலைய பொறுப்பாளா் எலிசபெத் செய்திருந்தாா்.