TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
கூடலூரில் வன உரிமைச் சட்டம் குறித்து பயிற்சி முகாம்
வன உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூா் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற முகாமில் 2006-ஆம் ஆண்டு வன உரிமை அங்கீகார சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை நடமுறைப்படுத்தி நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.
வனம் சாா்ந்த மற்றும் பழங்குடி மக்கள் பயன்பெறும் நோக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் அரசு சாா்பில் பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கூடலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமை கோட்டாட்சியா் குணசேரன் தொடங்கிவைத்தாா்.
பயிற்சியாளா் எம்.எஸ்.செல்வராஜ் பயிற்சி அளித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் வன உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தாா். பழங்குடியினா் நலத் துறை வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, சட்ட விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
இதில் சட்டத்தின் மூலம் பாரம்பரிய நிலம் மற்றும் வனம், வன வள உரிமைகளை பெற்று சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் கூடலூா், ஓவேலி, தேவா்சோலை, நெல்லியாளம் பகுதிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.