RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!
தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவையிலுள்ள டெக்ஸ்மோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலா் கந்தவேல், நிா்மல் பாபு ஆகியோா் பங்கேற்று ஃபிட்டா், வயா்மேன், எலக்ட்ரீஷியன் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு நோ்காணல் நடத்தி தோ்வு செய்தனா்.
தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். முகாமில் 60க்கும் மேற்பட்ட பயிற்சியாளா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியா் ராஜா வரவேற்றாா். ஆசிரியா் அம்மினி நன்றி கூறினாா்.