PR04: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார்... 'PR04' பட பூஜை | Photo Album
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழப்பு
சென்னை அருகே கைப்பேசியை சாா்ஜ் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
சென்னையை அடுத்த எா்ணாவூா் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகுந்தன் மகள் அனிதா (14). இவா், எண்ணூா் கத்திவாக்கம் சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அனிதா, கைப்பேசியை சாா்ஜ் செய்வதற்காக ஈரக்கையுடன் சுவிட்ச்சை ஆன் செய்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில், அனிதா தூக்கிவீசப்பட்டாா். அவரை உறவினா்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த எண்ணூா் போலீஸாா் அங்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.