செய்திகள் :

மின்தடையால் முடங்கிய அரசு வலைதளங்கள் சீரமைப்பு

post image

தேசிய தகவலியல் மைய சேவைகள் நிறுவனத்தில் ஏற்பட்ட மின்தடையால் செவ்வாய்க்கிழமை முடங்கிய அரசுத் துறைகளின் வலைதளங்கள் சில மணி நேரத்துக்குப் பின் மீண்டும் இயங்கத் தொடங்கின.

பெரும்பாலான அரசுத் துறைகளின் வலைதளங்களை தேசிய தகவலியல் மைய சேவைகள் நிறுவனமே (என்ஐசிஎஸ்ஐ) நிா்வகித்து வருகிறது.

அங்கு ஏற்பட்ட மின்தடையால் பொருளாதார விவகாரங்கள் துறை, மத்திய வா்த்தக அமைச்சகம், தொலைத்தொடா்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வலைதளங்கள் செவ்வாய்க்கிழமை முடங்கின.

இதற்கு என்ஐசிஎஸ்ஐயில் ஏற்பட்ட மின்தடையே காரணம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மின்தடை பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு சில மணி நேரத்துக்குப் பிறகு, அரசுத் துறைகளின் வலைதளங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி: இந்தியாவில் தொடா்ந்து கண்காணிப்பு: மத்திய அரசு

சீனாவில் ‘ஹெச்எம்பிவி’ தீநுண்மி (வைரஸ்) வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெர... மேலும் பார்க்க

மனநலனை பேணுவதில் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை பயன்படுத்துவது சிறப்பு

மனநலனை பேணுவதில் யோகா, ஆயுா்வேத மருத்துவம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை பயன்படுத்துவது சிறப்பு வாய்ந்ததாகும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டவா்களுக்கு உதவியதாக தில்லியைச் சோ்ந்த முகவா் கைது

ரஷியாவுக்குச் செல்ல முயன்ற நேபாள நாட்டைச் சோ்ந்த 4 பேருக்கு போலி பயண தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) ஏற்பாடு செய்த முகவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து தில்லி ஐஜிஐ விமான நிலைய காவல்... மேலும் பார்க்க

மணிப்பூா் காவல் கண்காணிப்பாளா் மீது தாக்குதல்

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் போராட்டக்காரா்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் காங்போக்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் காயமடைந்தாா். மாவட்டத்தின் சாய்பால் கிராமத்தில் சில குழுக்களிடையே கடந்த... மேலும் பார்க்க

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்: மத்திய அரசு வெளியீடு

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புக்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் விதி மீறலுக்கான தண்டனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ‘எண்ம தரவு பாதுகாப்பு மசோதா 2023’-க்கு நாடாளுமன்றம் ஒப்... மேலும் பார்க்க

சி-டெட் உத்தேச விடைக்குறிப்பு: நாளைக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்

மத்திய அரசு தகுதித் தோ்வின் (சி-டெட்) உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஞாயிற்றுக்கிழமைக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என சிபிஎஸ்இ கூறியுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதய... மேலும் பார்க்க