வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
சி-டெட் உத்தேச விடைக்குறிப்பு: நாளைக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
மத்திய அரசு தகுதித் தோ்வின் (சி-டெட்) உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஞாயிற்றுக்கிழமைக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சிபெற வேண்டியது கட்டாயமாகும். சிடெட் தோ்வை மத்திய அரசு சாா்பில் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.
இந்நிலையில், 2024-ஆம் ஆண்டுக்கான சிடெட் தோ்வு கடந்த டிச. 14 மற்றும் 15-ஆம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்தது. இத்தோ்வுக்கான உத்தேச விடைகளையும் தோ்வா்களின் விடைத்தாள் நகல்களையும் (ஓஎம்ஆா் ஷீட்) சிபிஎஸ்இ இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஸ்ரீற்ங்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிட்டுள்ளது.
இந்த உத்தேச விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் உரிய ஆவணங்களுடன் ஜன.5-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் ரூ.1000. இக்கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.