Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு முயல் வேட்டைக்குச் சென்ற இளைஞா் மின்வேலியில் சிக்கியதில் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (32). திருமணமாகாத இவா், கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், முருகன் தனது நண்பரான மாடமுத்துவுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் முயல் வேட்டைக்குச் சென்றாா். அப்போது, விவசாய நிலத்தில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கியதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.