செய்திகள் :

மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!

post image

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் நிதீஷ் ரெட்டி பூமா பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் விராட் கோலி தனக்கு அளித்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் பிஜிடி தொடரில் நிதீஷ் ரெட்டி தேர்வானார். சிறப்பாக விளையாடிய நிதீஷ் ரெட்டி மெல்போர்னில் சதம் அடித்து அசத்தினார்.

3-1 என் இந்திய அணி தோற்றாலும் நிதீஷ் ரெட்டி மாதிரியான நபர்கள் வெளியே தெரிந்தார்கள்.

இந்நிலையில் நிதீஷ் ரெட்டி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியதாவது

கோலி அளித்த பரிசு

ஓய்வறையில் விராட் கோலி சர்பராஸ் கானிடம் உன்னுடைய காலணியின் எண் என்ன? எனக் கேட்டார். அதற்கு அவர் 9 எனவே, கோலி திரும்பி என்னைப் பார்த்தார். நான் 10 என்றேன். அவர் என்னிடம் கொடுத்தார்.

விராட் கோலியின் காலணி எனக்கு சரியாக இருக்குமா தெரியவில்லை. ஆனால், நான் அவரது காலணியை அணிய விரும்பினேன்.

அடுத்த போட்டியில் அந்தக் காலணியுடன்தான் விளையாடினேன். அதில்தான் சதமடித்தேன்.

அப்பா அழுகை, கோலி வாழ்த்து

ஓய்வறையில் அனைவரும் வந்து எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆனால், நான் விராட் கோலிக்காக காத்திருந்தேன்.

கடைசியாக விராட் கோலி என்னிடம் வந்து சிறப்பான ஆட்டத்தை ஆடியதாகக் கூறினார். அந்தக் கணம் எனக்கு சிறப்பானதாக இருந்தது.

நானும் எனது அப்பாவை திடலில் தேடினேன். கிடைக்கவில்லை. பிறகு, திரையில் அவர் அழுதுகொண்டிருந்தார்.

மிரட்டிய டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட் என்னிடம் வந்து ‘நிதீஷ் இன்று எங்கு பார்டிக்கு ப்க்கிறாய்? எனக் கேட்டார். நான் எங்குமே செல்ல மாட்டேன் எனத் தெரிந்தும் அவர் அப்படிக் கேட்டார்.

ஆஸி. சிறந்த இடம். மெல்போர்ன் அற்புதமான இடம். நீங்கள் அங்கு சென்று ஜாலியாக இருக்கலாம். டிராவிஸ் என்னை திசைத் திருப்ப வந்திருந்தார். ஆனால், நான் ‘டிராவிஸ் ஒருநாள் நீங்களும் நானும் ஒன்றாக போகலாம்’என்றேன்.

ஒருமுறை ஃபீல்டிங்கின் போது ‘நிதீஷ் நீ என்னை அடித்தால். நானும் உனது ஓவரில் அடிப்பேன்’ என மிரட்டினார்.

வேறு அணிகள் என்னை அழைத்தது... ஆனால்

எனக்கு வேறு அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கு சன்ரைசர்ஸ் அணிதான் எனக்கு குடும்பம் மாதிரி இருக்கிறது. உங்களது சொந்த அணியை பிரதிநிதிப்படுத்துவதால் அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

நன்றாக விளையாடி மீண்டும் ஐபிஎல் கோப்பையை எங்கள் அணிக்கு கொண்டு வருகிறேன். அணியும் என் மீது அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளது. மற்ற அணிகளுக்கு வேண்டாம் எனக் கூறுவது கடினமதாம். ஆனால், நான் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடவே விரும்புகிறேன்.

தெலுங்கில் பேசும்போது அனைவரும் என்னை அவர்களது சகோதரர்களாகவே நினைத்து பேசுகிறார்கள். சொந்த அணிக்கு விளையாடுவதால் இந்த நன்மைகள் இருக்கின்றன. ஆரஞ்சு ஆர்மி பெருத்த ஆதரவை தருகிறார்கள். திடலில் ஆரஞ்சு கொடிகளாக நிறைந்து இருக்கும். அந்த ஆற்றலை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என்றார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான சாதனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக வ... மேலும் பார்க்க

ஹசன் நவாஸ் அதிவேக சதம்: 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பாகிஸ்தான் அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹசன் நவாஸ் சதத்தால் 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்தது பாகிஸ்தான்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட... மேலும் பார்க்க

அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கட... மேலும் பார்க்க

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி குவாஹாட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. ம... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும்! -பிசிசிஐ

நிகழாண்டுக்கான ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா? என அனைவர் மத்தியிலும் கேள்வியெழுந்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரின் தொடக்கப் போட... மேலும் பார்க்க

ஐபிஎல்லின் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி! புதிய விதிகள் என்ன?

ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரில் தொடக்கப் போட்டியில் கொல்கத்தா மற்றும்... மேலும் பார்க்க