செய்திகள் :

முதலீட்டில் செயல் நுண்ணறிவு: இளம் தலைமுறையினர் அபாரம்!

post image

பங்குச்சந்தை முதலீட்டில் பெரும்பாலான இளம்தலைமுறையினர், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பங்குச்சந்தை குறித்த ஆர்வம் இளம்தலைமுறையினரிடையே தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களும் முதலீடு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இருப்பினும், அவர்கள் பொருளாதார வல்லுநர்களோ ஆசிரியர்களோ அல்லாமல், பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவின் உதவியையே நாடுகின்றனர் என்று உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வில் கூறியுள்ளது.

நிதிசார்ந்த முடிவுகள், செயல்திறன், குறைந்த செலவுகள் முதலானவற்றால், மனித வல்லுநர்களைவிட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

ஜென் இசட் (Gen Z), மில்லினியல் என்றழைக்கப்படும் (1980 முதல் 2010) தற்போதைய இளம்தலைமுறையினரில் 86 சதவிகிதத்தினர் முதலீடு துறையில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களில் 41 சதவிகிதத்தினர் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி, முதலீடு செய்ய விரும்புகின்றனர். அந்த 86 சதவிகிதத்திலும் 47 சதவிகிதத்தினர் மட்டுமே தொடர்ந்து நாட்டம் கொண்டிருக்கின்றனர்.

முதலீட்டில் ஜென் எக்ஸ் (1965 முதல் 1980) தலைமுறையினர் 9 சதவிகிதம் மட்டுமே நாட்டம் கொண்டிருந்த நிலையில், 30 சதவிகித ஜென் இசட் தலைமுறையினர் தங்கள் ஆரம்ப வயதிலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர்.

இதையும் படிக்க:பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!

டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் 7.1 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோங்கா தீவைச் சுற்றிலும் 100 கி.மீ. சுற்றளவுக்கு நிலநடுக்கம் ஏற்... மேலும் பார்க்க

ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!

ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயல் நுண்ணறிவு தளமான சாட் ஜிபிடியின் மூலம் ஜிப்லி என்ற அனிமேஷன் படங்... மேலும் பார்க்க

உலகளவில் சேட்ஜிபிடி சேவை பாதிப்பு! ஜிப்லி காரணமா?

உலகளவில் பல்வேறு பயனர்களுக்கு சேட்ஜிபிடி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேட்ஜிபிடியின் ஜிப்லி எனப்படும் புகைப்படத்தை ஓவியமாக மாற்றும் சேவையில் பிழைகள் ஏற்படுவதாகவும் இதனால் சேட்ஜிபிடி சேவையும் பாதிக... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியது!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சொந்தமான கார் வெடித்த சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகளவில் அதிகப்படியான பாதுகாப்பில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (... மேலும் பார்க்க

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..!

மியான்மரில் இன்றும்(மார்ச் 30) மியான்மரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

பாங்காக் நிலநடுக்கம்: உயிரிழப்பு 17-ஆக உயர்வு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து இன்று(மார்ச் 30) பாங்காக் பெருநகர அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: பாங்க... மேலும் பார்க்க