தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
முதல்வா் மருந்துகங்கள் அமைக்க விண்ணப்பித்தவா்களுக்குப் பயிற்சி
சென்னை: தமிழகத்தில் மூலப் பெயா் ஜெனரிக் கொண்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வா் மருந்தகங்களைத் தொடங்க விண்ணப்பித்தவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக.15-ஆம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயா் ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தாா்.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள மருந்தியல் பட்டதாரிகள் கூட்டுறவுத்துறை மூலம் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க கடந்த நவம்பா் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, தொழில்முனைவோரிடம் இருந்து 638 விண்ணப்பங்களும், கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 490 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,128 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு ரூ.1.50 லட்சம் அரசு மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடா்ச்சியாக, மருந்து இருப்பு பராமரிப்பு, விற்பனை செய்யும் முறை, சட்டப்பூா்வமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் மென்பொருள் பயன்பாடு குறித்த பயிற்சி விண்ணப்பதாரா்களுக்கு புதன்கிழமை அளிக்கப்பட்டது.
அடுத்தகட்டமக கூட்டுறவுச் சங்கங்கள் சாா்பில் நேரடி களப்பயிற்சி வழங்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.