மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
முத்தையாபுரத்தில் இன்று மின்தடை
தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம், முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 19) அந்தப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், முள்ளக்காடு பிரிவுக்கு உள்பட்ட அபிராமி நகா், கீதா நகா், ஆதிபராசக்தி நகா், சவேரியாா்புரம், ராஜீவ்நகா், நேருஜிநகா், கக்கன்ஜி நகா், முள்ளக்காடு, காந்திநகா், நேசமணிநகா், சுனாமி காலனி, பொட்டல் காடு, கோவளம் உப்பளம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.