செய்திகள் :

முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்!

post image

முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் (79), குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனது வீட்டில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி பூஜையின் போது ஆரத்தி காட்டியதில் ஏற்பட்ட தீ விபத்தில் கிரிஜா வியாஸ் பலத்த தீக்காயமடைந்தார். அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடுமையான தீக்காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரின் சகோதரர் கோபால் சர்மா தெரிவித்தார். அவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை உதய்பூரில் நடைபெறும் என்று சர்மா கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அனுபவமிக்க தலைவரான கிரிஜா வியாஸ், மாநில மற்றும் மத்திய அரசுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கை முழுவதும், காங்கிரஸில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ள கிரிஜா வியாஸ், 1991 ஆம் ஆண்டு, உதய்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராக பணியாற்றிய கிரிஜா வியாஸ், ராஜஸ்தானின் சித்தோர்கர் தொகுதியிலிருந்து 15-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கிரிஜா வியாஸின் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பறித்து எறியப்படும்! - அமித் ஷா

பயங்கரவாதத்தை மோடி அரசு காப்பாற்றாது: அமித் ஷா

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.அஸ்ஸாமில் போடோ சமூகத்தின் தலைவரான உபேந்திர நாத் பிரம்மாவின் சிலை திறப்பு விழா மற்றும் அவரது பெயரை... மேலும் பார்க்க

பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பிடுங்கி எறியப்படும்! - அமித் ஷா

நாட்டில் பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பிடுங்கி எறியப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!

சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்து டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு ரயில் நி... மேலும் பார்க்க

அதிகரிக்கும் போர்ப் பதற்றம்! அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மிகவும் பரபரப்பான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேச்சுவார்த்தை நட... மேலும் பார்க்க

தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு! கார்கே குற்றச்சாட்டு!

தொழிலாளர்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதராகவும் பாஜக அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மே தினத்தையொட்டி, பெங்களூரில் தொழிலாளர் தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்... மேலும் பார்க்க

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: காக்னிசன்ட் அறிவிப்பு!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் புதிதாக 20,000 பணியிடங்களைச் சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்த... மேலும் பார்க்க