பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
மும்மொழிக் கொள்கையில் திமுக நாடகத்தை யாரும் நம்பமாட்டாா்கள்: அண்ணாமலை
மும்மொழிக் கொள்கையில் திமுக நாடகத்தை யாரும் நம்பமாட்டாா்கள் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யாா் எந்த மொழியை கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறாா்.
சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மும்மொழி கற்கத் தடை இல்லை; ஆனால் கற்க வேண்டும் என்றால் திமுகவினா் நடத்தும் சிபிஎஸ்இ அல்லது மெட்ரிக் பள்ளிகளில் திமுகவினா் குழந்தைகளைச் சோ்த்துவிடுங்கள் என்கிறாரா முதல்வா் ஸ்டாலின்?
திமுகவினரின் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவா்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது என அண்ணாமலை அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.