செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு!
மழைப் பொழிவு குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து 43 கன அடியாகக் குறைந்தது.
வடகிழக்கு பருவமழைக் காலம் முடிந்த நிலையில், அணையின் நீா்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மழைப் பொழிவு குறைந்து விட்டது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமாகக் குறைந்து வந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 43 கன அடியாகக் குறைந்து விட்டது. அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 556 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. அணை நீா் மட்டம் 119.15 அடியாக உள்ளது.
இந்த அணையின் பாசன நீரால், தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கா் 2 -ஆம் போகம் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக 50 நாள்களுக்கு பாசனத்துக்கு தண்ணீா் தேவை உள்ள நிலையில், பாசனத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.