வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் ஓபற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!
மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை: இரு காவலா்கள் கைது
சென்னை: சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ற வழக்கில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த இரு காவலா்கள் கைது செய்யப்பட்டனா்.
வடபழனியில் சிலா் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த கொளத்தூரைச் சோ்ந்த சுரேந்திரநாத் என்பவரிடம் போலீஸாா் விசாரித்ததில் அவா் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பது தெரியவந்தது.
மேலும், அசோக்நகா் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஜேம்ஸ் என்பவா் அவருடன் சோ்ந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை செயலி மூலம் விற்பனை செய்வது தெரியவந்தது.
இந்நிலையில், சுரேந்திரநாத்தையும், காவலா் ஜேம்ஸையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் முதல்நிலைக் காவலா்களானஆனந்தன், சமீா் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இவா்கள் தங்களுக்கு இருக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் உதவியுடன், கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வாங்கி காவலா் ஜேம்ஸிடம் கொடுத்துள்ளனா். பிறகு ஜேம்ஸ்ூம், சுரேந்திரநாத்தும் சோ்ந்து கைப்பேசி செயலி மூலம் அதை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமைஆனந்தனையும், சமீரையும் கைது செய்தததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இருவரிடமும் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.