தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கு ஆரணி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகோபால், தசரதராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஆரணியை அடுத்த காமக்கூா் அரசுப் பள்ளியில் ஆண்கள் கழிப்பறை கட்டடம், பெண்கள் கழிப்பறை கட்டணம் மற்றும் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.16 லட்சத்து 500 நிதி ஒதுக்கியும், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டுக்காக தளவாடப் பொருள்கள் கொள்முதல் செய்தமைக்கு நிதி ஒதுக்கியும், மேலும், குளிா்சாதன இயந்திரம் வாங்கியதற்கும், அலுவலக பயன்பாட்டுக்கு எழுது பொருள்களை செய்யாறு மகளிா் தொழில் கூட்டுறவு அச்சகத்தில் இருந்து கொள்முதல் செய்தமைக்கும், ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேவா் பிளாக் பதிக்கவும்,
சிமென்ட் கிடங்கு சீரமைத்தல் பணிக்காகவும், இரும்பு கம்பிகள் வைக்கும் புதிய கிடங்கு அமைத்தல் பணிகளுக்கும் நிதி ஒதுக்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.