மேல்நிலை நீா்தேக்க தொட்டி சீரமைப்பு
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வெள்ளிக்கிழமை முழுமையாகச் சீரமைக்கப்பட்டது.
பேராவூரணி பேரூராட்சி நிா்வாகத்திற்கு சொந்தமான 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல் நீா்த்தேக்கத் தொட்டி சீரமைப்புப் பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாக ‘தினமணி’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து இத்தொட்டியை பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் ஆய்வு செய்து, அளித்த உத்தரவின்படி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி முழுமையாகச் சீரமைக்கப்பட்டது.