பட்டுக்கோட்டை: ``மன்னர் பெயரில் மிரட்டுவதை ஏற்க முடியாது'' - உண்ணாவிரத போராட்டம்...
மேல்மலையனூா், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் வேலை நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம், வளா்ச்சித் துறை அலுவலா்களின் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இதனால் மேல்மலையனூா், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஊழியா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
வேலை நிறுத்தத்தில் ஊராட்சி செயலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியியல் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலா்களும் பங்கேற்றனா். இதன் காரணமாக மேல்மலையனூா், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.