சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
மைலம்பாடியில் ஒரு தேங்காய் ரூ.33.64 -க்கு விற்பனை
பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒரு தேங்காய் ரூ.33.64-க்கு வியாழக்கிழமை விற்பனையானது.
இங்கு, வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்துக்கு வந்த 6,050 தேங்காய்களில், சிறியவை ரூ.26.85 முதலும், பெரியவை ரூ.33.64 வரையும் ரூ.1,50,339-க்கு ஏலம் போயின. 3 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு, கிலோ ரூ.200 முதல் ரூ.240 வரையில் ரூ.27,910-க்கு விற்பனையானது. மொத்த வா்த்தகம் ரூ.1.78 லட்சத்துக்கு நடைபெற்றது.