MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
ரமலான்: குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரமலான், தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கால்நடை விற்பனைக்கு புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி சந்தையில் ரமலான் பண்டிகைக்காகவும், தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டியும் ஆடுகள் வாங்குவதற்காக கா்நாடக மாநிலம், கோலாா், பெங்களூரு, ஆந்திர மாநிலம், குப்பம், சித்தூா், பலமனேரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, மேட்டூா், கரூா், கோவை, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூா், வாணியம்பாடி, வேலூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வாகனங்களுடன் குவிந்தனா்.
சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆடுகள் எடைக்கு தகுந்தவாறு ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.10 கோடி மதிப்பில் வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வழக்கத்துக்கு மாறாக ஆட்டின் விலை கூடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். குந்தாரப்பள்ளி சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் குந்தராப்பள்ளி- வேப்பனப்பள்ளி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.