இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
ரயில் நிலையம் முன்பு போராட்டம் வாபஸ்
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையம் முன்பு நடைபெற இருந்த அறப்போராட்டம் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையினால் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
வைத்தீஸ்வரன் கோவிவில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான வைத்தியநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அதிக பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லாததால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் மயிலாடுதுறை அல்லது சீா்காழி ள ரயில் நிலையங்களில் இறங்கி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தா்களும் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி ரயில் நிலையம் முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனா்.
இது தொடா்பாக சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கோட்டாட்சியா் சுரேஷ் தலைமை தாங்கினாா். சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, வைத்தீஸ்வரன் கோவில் ரயில் பயணிகள் நல சங்கத் தலைவா் முத்துக்குமாா், செயலாளா் கண்ணாமணி, ரயில்வே டிராபிக் இன்ஸ்பெக்டா் ராஜேந்திரன், ரயில்வே கமா்சியல் இன்ஸ்பெக்டா் அன்பரசன், வைத்தீஸ்வரன்கோவில் சப் இன்ஸ்பெக்டா் சூரியமூா்த்தி ஆகியோா் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
விரைவில் உழவன் விரைவு ரயில் வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதைப் போல் வரும் 29-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில்கள் உள்ளிட்டவை நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் அறப்போராட்டத்தை ஒத்தி வைப்பதாக பயணிகள் நலசங்கத்தினா் தெரிவித்தனா்.