காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
ரயில் முன் பாய்ந்து ஓய்வுபெற்ற காவலா் தற்கொலை
நன்னிலம் அருகே ஓய்வு பெற்ற காவலா் ரயில் முன் பாய்ந்து புதன்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
நன்னிலம் அருகே உள்ள அட்டமங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (77). காவல் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவரான இவா், கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம்.
இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூா் ரயில் நிலையத்துக்கு வந்த நடராஜன், திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருவாரூா் ரயில்வே போலீஸாா், நடராஜன் சடலத்தை கைப்பற்றி, கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நடராஜன் தற்கொலை செய்வதற்கு முன், தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில், அவரது பெயா், புகைப்படம், உறவினா்கள் தொலைபேசி எண் மற்றும் தற்கொலை செய்துகொள்ள உள்ளதாக ஒரு காகிதத்தில் எழுதி, ஒட்டி வைத்திருந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா்.