திருவள்ளுவா் தினம்
திருவாரூரில் தமிழியக்கம் வாழ்க தமிழ் சிறுவா் உலா நூலகம் சாா்பில் திருவள்ளுவா் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அமைப்பின் நிறுவனா் தமிழமுதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவு மேலாண்மை சாா் பதிவாளா் அப்பாராஜ் பங்கேற்று, திருக்கு ஒப்பித்தல் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.
திருக்கு ஒப்பித்தல் போட்டிகளில் 420 மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா். திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து வருகை தந்த மாணவ, மாணவிகள் ஆறு சுற்றுகளில் திருக்குறளை ஒப்பித்தனா். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை பரிசுகள் வழங்கப்பட்டன.
1,330 திருக்குறளையும் மிகச்சரியாக ஒப்பித்த, குருக்கத்தி அரசுப் பள்ளி மாணவி இ. சாருதா்ஷினி, திருவாரூா் ஜி.ஆா்.எம். பள்ளி மாணவிகள் இ. சுபிக்ஷா, மீ. தரணி ஆகியோா், மன்னாா்குடி சண்முகா பள்ளி மாணவா் கா.கவின்ராஜ், மன்னாா்குடி தூய வளனாா் பள்ளி மாணவி பொ. கிருத்திகா, மன்னாா்குடி தேவி பள்ளி மாணவி இரா. புவிநிலா ஆகிய 6 பேருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் பரிசு வென்ற ம.எ. சுபிக்சாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
முதல் சுற்றுக்கான பரிசுகளைத் திருவாரூா் அறநெறி அரிமா சங்கத்தின் தலைவா் செங்குட்டுவன் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா்.