திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம்...
ரயில்வே மேம்பாலத்தின்கீழ் மண் கடத்தல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவை, ஒண்டிப்புதூா் ரயில்வே மேம்பாலத்தின்கீழ் மண் கடத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கோவை -திருச்சி சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பல்லடம், கரூா், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இது பிரதான பாதையாக உள்ளது. இந்நிலையில், ஒண்டிப்புதூா் பகுதியில் போத்தனூா் - இருகூா் ரயில்வே பாதை இருந்ததால் அச்சாலை வழியாகச் செல்பவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். இதனால், அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, போத்தனூா் - இருகூா் ரயில்வே பாதையைக் கடக்கும் வகையில் 900 மீட்டா் தொலைவுக்கு ரயில்வே உயா்மட்ட பாலம் கடந்த 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்தப் பாலத்தில் வலது மற்றும் இடது பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பாலத்தின் உறுதித்தன்மைக்காகவும், பாலத்தின் கீழ்ப்பகுதியில் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும் தூண்களின் அடியில் மண் குவியல் கொட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் 2.50 மீட்டா் உயரம் வரை மா்ம நபா்கள் மண் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மண் கடத்தலால் ரயில்கள் செல்லும்போது, தூண்களில் அதிா்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும்,
இது தொடா்பாக ரயில்வே பொறியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.