செய்திகள் :

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

post image

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வழிகாட்டு குண்டு’ (கைடட் பாம்) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் எரிந்த மினிவேன் மற்றும் விளையாட்டுத் திடல் அருகே உடல்கள் சிதறிக்கிடந்த காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘ரஷியாவின் இந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. சாதாரண மக்கள் மீது, அதுவும் அவா்கள் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியா தனது பகுதியாகக் கருதுகிறது. அந்தப் பிராந்தியத்தில் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், இன்னும் பல பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அவற்றைக் கைப்பற்றுவதற்காக போா் எல்லையில் ரஷியா சுமாா் 1 லட்சம் படையினரைக் குவித்து, புதிய தாக்குதலுக்கு தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், போா் முனையில் இருந்து வெறும் 8 கி.மீ. தொலைவில் உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னா், கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் முதல்முறையாக உக்ரைன் அரசு தலைமையகத்தில் ரஷியா அண்மையில் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் நடைபெற்றுவரும் மிக மோசமான உக்ரைன் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கானோா் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய - நேபாள எல்லையில் உச்சகட்ட கண்காணிப்பு! எல்லையில் நுழைய கட்டுப்பாடு

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக கலவரம் மூண்டநிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் உச்சகட்ட கண்காணிப்பு போடப்... மேலும் பார்க்க

நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை என்று அந்நாட்டு ராணுவம... மேலும் பார்க்க

உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு, உணவருந்த சென்ற அமெரிக்க அதிபரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நவீன கால ஹிட்லர் என கோஷமெழுப்பியதால் சங்கடம் ஏற்பட்டது. மேலும் பார்க்க

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அரசின் ஊழல... மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் நாடு முழுவதும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதிக்கான முயற்சியை அந்நாட்டு ராணுவம் கையிலெடுத்துள்ளது.நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு வி... மேலும் பார்க்க

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

போலந்து நாட்டுக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் ஊடுருவியதால், ரஷியாவின் மீது நடவடிக்கை நேட்டோ அமைப்புக்கு போலந்தும் உக்ரைனும் வலியுறுத்தியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டுவரும் போரை ... மேலும் பார்க்க