செய்திகள் :

ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

post image

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 56 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் எக்ஸ் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து பதிவு:

என் சகோதரர்-இலட்சியவாதி ராகுல் காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

"இது ரத்த பந்தம் அல்ல, சிந்தனை, தொலைநோக்கு மற்றும் கொள்கையால் இணைந்த பந்தம்"

நீங்கள் தொடர்ந்து உறுதியாக நின்று தைரியத்துடன் வழிநடத்துவீர்கள். பிரகாசமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.

ரூ.2,000 கோடி ஊழல்! அரசுப்பள்ளி வகுப்பறை கட்டுமானத்தில் முறைகேடு: 37 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கரூர்: பிரபல ரௌடியை சுட்டுப்பிடித்த போலீஸார்!

கரூர்: கரூரில் காவல்துறையினரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரௌடி பென்சில் தமிழழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின... மேலும் பார்க்க

சுங்க கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 என்பதை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு க... மேலும் பார்க்க

15 நாளுக்குள் வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம்

வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதை விரைவுபடுத்தும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையாக, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின் 15 நாளுக்குள் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது தெ... மேலும் பார்க்க

சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி(78) ஞா... மேலும் பார்க்க

பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டும்.. உருக்கமாக டாடா குழுமத் தலைவர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் தாய், தந்தையை இழந்து லண்டனில் நிர்கதியாக நிற்கும் குழந்தைகளுக்கு பண உதவியைத் தாண்டி வேறென்ன உதவிகள் வேண்டுமென அறிந்து நிறைவேற்றுவோம் என உருக்கமாக தெரிவித்துள்ள ட... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து 74,120-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த இரு நாள்களில் பவுனுக்கு ரூ.960 குறைந்தது. அதைத்தொடா்ந்து, புதன்... மேலும் பார்க்க