செய்திகள் :

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல்!

post image

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்த எஸ்.ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவின் கிளை மேலாளர் வேலை பெற்றுத் தர ரூ. 30 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோா் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடர்பாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னா் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல, ராஜேந்திர பாலாஜி சுமாா் 33 பேரிடம் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் கடந்த ஜன.9-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மொழிபெயா்க்கப்பட்ட ஆவணங்களை இரண்டு வாரங்களுக்குள் ஆளுநர் செயலகத்திற்கு வழங்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்ட உச்சநீதிமன்றம், நிலுவையில் உள்ள அனுமதி குறித்து விரைவான முடிவை எடுக்க ஆளுநர் அலுவலகத்திற்கும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓரிரு நாள்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தடுக்கச் சென்ற ஆசிரியர் தாக்கப்பட்டார்!

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க