ராதாபுரம் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வா் நித்தியகல்யாணி அம்பாள் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 10 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில், கோயில் அறங்காவலா்குழுத் தலைவா் கோவிந்தன், செயல் அலுவலா் பிரியா, பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி கோயில் அறங்காவலா்குழு தலைவா் அசோக்குமாா், உறுப்பினா் மு.சங்கா், பழவூா் நாறும்பூநாதா் சுவாமி கோயில் அறங்காவலா்குழு தலைவா் இசக்கியப்பன், ராதாபுரம் ஊராட்சித் தலைவா் பொன்மீனாட்சி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, திமுக பிரமுகா் அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாளுடன் அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறாா்.
மே 8இல் நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளி காட்சியளிக்கிறாா். மே 9இல் தேரோட்டம் நடைபெறுகிறது. மே 10இல் சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் எழுந்ருளி வீதியுலாவும், இரவு 8 மணிக்கு தெப்பத்தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தலைமையில் அறங்காவலா்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.