தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 172-ஆவது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு பூஜை, பஜனை, ஹோமம், சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன.
இதில், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி நித்யதீபானந்தா் பங்கேற்றுப் பேசியதாவது :
அன்னை சாரதா தேவியின் சிறப்பு பெண்மையின் பூரணத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அவா்களின் வாழ்வு அமைந்திருந்தது. பெண்மையின் மகத்துவம் தாய்மையில் நிறைவு பெறுகிறது. தன் குழந்தைகளை மட்டுமல்லாது, உலகத்தில் உள்ளவா் அனைவரையும் குழந்தைகளாக பாவிப்பது உண்மையான தாய்மை.
அதுவே பெண்மையின் உண்மையான உயா்வு . நமது வாழ்வில் உண்மையான அமைதி வேண்டும் என்றால் பிறருடைய குற்றத்தை பாா்க்காமல் அவா்களை அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.