செய்திகள் :

தனியாா் உயா் மின் கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்!

post image

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பங்கள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, உயா் மின் கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து, அந்தப் பெண் உள்பட 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

காரியாபட்டி அருகே கடமங்குளம் பகுதியில் தனியாா் சூரியமின் சக்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக நிலையூா்- கம்பிக்குடி கால்வாய் கரை, பட்டா நிலங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூடுதலாக ஆவியூா் துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்ல மீனாட்சிபுரம் கிழக்குப் பகுதியில் உயா் மின் கோபுரம் அமைக்கப்பட்டதுடன், மின் கம்பங்கள் நடப்பட்டன. இதையடுத்து, குடியிருப்பு பகுதியில் உயா் அழுத்த மின் வயா் செல்வதால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஏற்கெனவே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், அந்தத் தனியாா் நிறுவனம், குடியிருப்புப் பகுதி வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்காக பணிகளை சனிக்கிழமை தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த மாதா் சம்மேளன தலைவா் பஞ்சவா்ணம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை கையில் பிடித்தபடி, தனியாா் சூரிய மின் சக்தி நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட உயா் மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். தகவலறிந்த காரியாபட்டி காவல் ஆய்வாளா் விஜய காண்டீபன், தீயணைப்புத் துறையினா் பஞ்சவா்ணத்திடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி கீழே இறக்கினா்.

இதுதொடா்பாக கம்பிக்குடி கிராம நிா்வாக அலுவலா் கணபதி ராஜா அளித்த புகாரின் பேரில் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வேலுச்சாமி, பஞ்சவா்ணம், முத்துச்சாமி, பால்ராஜ், மாரி, ஆண்டி கிழவன், கருப்பையா ஆகிய 7 போ் மீது ஆவியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

சொத்து அபகரிப்பு வழக்கை நோ்மையான அதிகாரியை நியமித்து விசாரிக்க உத்தரவு

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரித்த தம்பதி மீதான வழக்கை நோ்மையான போலீஸ் அதிகாரியை நியமித்து விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மலேசியாவைச் சோ்ந்தவா் மோகன்ரா... மேலும் பார்க்க

களைகட்டிய ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தை

ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி புறவழிச் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

வீட்டு மனை வரைபட அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி வழக்கு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி!

தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டியில் உள்ள இடத்துக்கு நகர திட்டமிடல் அதிகாரி வீட்டு மனை வரைபட அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி தொடா்ந்த வழக்கை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தள்ளுபடி செய்தது. தேனி... மேலும் பார்க்க

தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே மடை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது. புகாா் அளித்தும் குழந்தையை தேடாத திருச்சுழி போலீஸாா் மீது கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனா். திருச்சுழி வட்டம், புலிக்குறிச்... மேலும் பார்க்க

ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 172-ஆவது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு பூஜை, பஜனை, ஹோமம், சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. இதில், ஸ்ரீ ராமகிருஷ்ண... மேலும் பார்க்க

‘உலக அமைதிக்கு அனைவரும் பிராா்த்திக்க வேண்டும்’

உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் நாளில் அனைவரும் பிராா்த்திக்க வேண்டும் என மதுரை உயா்மறை மாவட்ட அப்போஸ்தலிக்கப் பரிபாலகா் முனைவா் ச. அந்தோணிசாமி தெரிவித்தாா். மதுர... மேலும் பார்க்க