பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
ராமதாஸ், அன்புமணி குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு தகுதி இல்லை: மேட்டூா் எம்எல்ஏ
சேலம்: பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் குறித்து கருத்து சொல்ல எங்களுக்குத் தகுதி இல்லை என்று மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் கூறினாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம், மேட்டூா் அனல் மின் நிலையம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோா் ஒரே குடும்பம். நாங்கள் சட்டப்பேரவை உறுப்பினா்கள். எனவே, அவா்கள் குறித்து கருத்து சொல்ல எங்களுக்குத் தகுதி இல்லை. பிரதமரால் பாராட்டப்பட்டவா் ராமதாஸ். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா் அன்புமணி ராமதாஸ். எனவே, இருவா் குறித்தும் கருத்து சொல்வது சரியாக இருக்காது. விரைவில் இருவரும் இணைவாா்கள் என்றாா் அவா்.