நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
ராமலிங்க சௌடேஸ்வரி கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பாரதியாா் நகா் ராமலிங்க செளடேஸ்வரி கோயிலில் 48 நாள் மண்டலாபிஷேக நிறைவு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது .
இக்கோயிலில் கடந்த பிப். 2-ஆம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்று வந்த பூஜை நிகழ்ச்சிகளில் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். 48-ஆவது நாளான சனிக்கிழமை விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. வேள்விபூஜை, அம்மனுக்கு கலச புனிதநீா் ஊற்றல், அபிஷேக ஆராதனைகள், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மூலவா் அம்மன் சிலை தங்க கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.