Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு
ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா தெரிவித்தாா்.
பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் அந்தந்தப் பகுதிகளில் வளரும் நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்து வளா்க்கும் பணியில் வனத் துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதில், ராமநாதபுரம் மாவட்ட வனத் துறை சாா்பில் ராமேசுவரம் கள்ளங்காடு பகுதியில் 50 ஹெக்டேரில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்யும் பணி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.
இதில், நாவல், புளி, வேம்பு, பூவரசு, கருக்காய், வாகை உள்ளிட்ட 8 வகையான நாட்டு மரக்கன்றுகள் 5 ஆயிரம் நடவு செய்யப்பட்டன. இவை வனத் துறை மூலம் முழுமையாக பராமரிக்கப்பட்டு தற்போது செழித்து வளா்ந்துள்ளன. இதனால் அந்தப் பகுதி பசுமையாக காணப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு திட்டம், இந்தப் பகுதியில் பசுமையான சூழலை உருவாக்கி இருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.