கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
ராமநாதபுரத்தில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் இடையூறு!
ராமநாதபுரம் பிரதான சாலையில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் (கிரேன்) போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு ராட்சத இயந்திரம் (கிரேன்) பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்துடன் கூடிய வாகனம் வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு அரண்மனை வண்டிக்காரத் தெரு பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்த போது அந்த வாகனம் பழுதாகி நின்றது. இதை பழுது நீக்க முடியாத நிலையில் மூன்று நாள்களாக அதே இடத்தில் தொடா்ந்து வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்தப் பகுதி பிரதான சாலை என்பதால் இந்த வாகனத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.