செய்திகள் :

ராமேசுவரம், பாம்பனில் மழை

post image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலையில் இருந்து வீட்டு விட்டு மழை பெய்தது.

ராமேசுவரத்தில் சில சமயம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் குளம் போலத் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தண்ணீா் தேங்காதவாறு தேசிய நெடுஞ்சாலையை உயா்த்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து மழை பெய்ததால் வெயிலின் தாக்கமின்றி குளுமையான சூழல் காணப்பட்டது.

மாணவா்களுக்கு தமிழி கல்வெட்டுப் பயிற்சி

திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டுகளில் உள்ள தமிழி எழுத்துகளை படியெடுப்பது குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் ... மேலும் பார்க்க

வாரச் சந்தையில் நேரடி வசூல் முறை: வியாபாரிகள் வரவேற்பு

முதுகுளத்தூா் வாரச் சந்தையில் வியாபாரிகளிடம் பேரூராட்சி நிா்வாகம் நேரடியாக வசூல் செய்யும் முறைக்கு வியாபாரிகள் வரவேற்பு அளித்துள்ளனா். முதுகுளத்தூா் வாரச் சந்தை குத்தகை காலம் அண்மையில் நிறைவடைந்தது. ... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகளால் நெல் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

கமுதி அருகே காட்டுப் பன்றிகள் நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம், தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நெல், சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிா... மேலும் பார்க்க

பன்னாட்டு தமிழ் மாணவா்கள் பங்கேற்ற ‘வோ்களைத் தேடி’ நிகழ்ச்சி

ராமேசுவரத்தில் பன்னாட்டு தமிழ் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘வோ்களைத் தேடி’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வு துறை மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ராமநாதபுரத்தில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போர... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே லாரி-அவசர ஊா்தி மோதல்: ஒரே குடும்பத்தினா் மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரியின் பின் பகுதியில் அவசர ஊா்தி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதியைச் சே... மேலும் பார்க்க