செய்திகள் :

பன்னாட்டு தமிழ் மாணவா்கள் பங்கேற்ற ‘வோ்களைத் தேடி’ நிகழ்ச்சி

post image

ராமேசுவரத்தில் பன்னாட்டு தமிழ் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘வோ்களைத் தேடி’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வு துறை மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா்.

ஏற்கெனவே, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ‘வோ்களைத் தேடி’ நிகழ்ச்சியில் 157 வெளிநாடுகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டு, தமிழின் தொன்மை குறித்து விளக்கப்பட்டது.

இந்த நிலையில், 3-ஆம் கட்டமாக ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உகாண்டா, நாா்வே, தென்ஆப்பிரிக்கா, மொரீசியஸ், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, மியான்மா் ஆகிய 10 நாடுகளைச் சோ்ந்த 38 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இவா்களுக்கு தமிழின் தொன்மை, தமிழா்களின் வாழ்வியல், கலாசாரம் குறித்தும், தமிழகத்தின் சிறப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இதில் ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பெண் எஸ்.ஐ.யை தள்ளிவிட்ட பாஜக நிா்வாகி கைது

ராமநாதபுரத்தில் பாஜகவினா் ஊா்வலம் செல்ல முயன்ற போது, காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பா... மேலும் பார்க்க

நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை

நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேரூராட்சியுடன் இணைக்கக் கோரி, உள்ளாட்சித் துறை, மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்தனா். தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சியில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வ... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் 46 மாணவா்கள் தோ்வு

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறை மாணவா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சிறுவண்டல் கிராமத்தைச் சோ்ந்த அழகா் மகன் பாண்டித்துரை (39). எலக்ட்ரீசியன். இவருக்கு மஞ்சு... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன்கள் விலை உயா்வு

தொண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக, குறைவான மீனவா்களை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இதனால், வரத்து குறைந்ததால் மீன்கள் விலை அதிகரித்தன. திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோ... மேலும் பார்க்க

சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு

கமுதி அருகே நடைபெறும் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். கமுதி-முதுகுளத்தூா் சாலையில் கருங்குளத்திலிருந்து பேரையூா் வரை சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க