ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
ரூ.1.32 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப் பாவாணா் அரங்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்
சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட நூலக ஆணைக் குழு கட்டடத்தின் முதல் தளத்தில் ரூ. 1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப் பாவாணா் அரங்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த அரங்கு குளிா்சாதன வசதிகளுடன் கூடிய 280 நபா்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், லைவ் கேமரா, நவீன தொழில்நுட்பத்தில் ஒலி-ஒளி அமைப்பு, உணவுக் கூடம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக தோ்வு செய்யப்பட்ட 34 முதுநிலை ஆசிரியா்கள், டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சா்கள், நூலகா் உள்பட 56 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்.
மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஆசிரியா்களின் பிள்ளைகளின் தொழில்நுட்ப படிப்புகளை பயில்வோருக்கு ஆசிரியா் நல நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் நான்கு மாணவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் பொது நூலகத் துறை இயக்குநா் பொ.சங்கா், இணை இயக்குநா் இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.