செய்திகள் :

ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

post image

இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது என நைட் ஃபிராங்க் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 7 கோடீஸ்வரர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 191 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 26 புதிய கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

உலகளாவிய பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க் அமைப்பு சமீபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சொத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோடீஸ்வரர்கள் நிறைந்த உலகத்தில், இந்தியாவில் 191 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத்துள்ளனர் என்றும், 2024 இல் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் (எச்என்டபிள்யூஅய்) ரூ.90 கோடிக்கும் மேற்பட்ட சொத்து மதிப்புள்ள தனி நபர்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 2.24 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா 4.7 லட்சம் கோடீஸ்வரர்களையும், இந்தியா 85,698 கோடீஸ்வரர்களையும், அதன் பிறகு ஜப்பான் சுமார் 65,000 கோடீஸ்வரர்களையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 1 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.87 கோடி) சொத்து மதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 80,686 ஆக இருந்தது. இது 2024 இல் 85,698 ஆக அதிகரித்துள்ளது. இது 6 சதவிகித உயர்வாகும்.

அமெரிக்காவுக்கு பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18% உயா்வு

மேலும், இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில்(2028) சுமார் ரூ.87 கோடி சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 94,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு இப்போது உலகளவில் 3 ஆவது இடத்தில் உள்ளது, அமெரிக்கா ரூ.700 லட்சம் கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து சீனா ரூ.1.34 லட்சம் கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளது.

உலகின் மிக பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி உள்ளிட்ட பல கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தங்கள் வணிக சாம்ராஜ்யங்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2024 இல் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ள கோடீஸ்வரர்களின் தாயமாக இந்தியா உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 26 பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். இது 2019 இல் வெறும் 7 ஆக இருந்தது.

இந்தியாவில் அதிக சொத்து மதிப்புள்ள நபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, நாட்டின் வலுவான நீண்டகால பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வளர்ந்து வரும் ஆடம்பர சந்தை ஆகியவையே காரணங்களாக எடுத்துக்காட்டுகிறது. இது உலகளாவிய சொத்து உருவாக்கத்தில், இந்தியாவை ஒரு முக்கிய நாடாக மாறுவதற்கு உதவுகின்றன என கூறப்பட்டுள்ளது.

ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!

கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப... மேலும் பார்க்க

லக்னௌ: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், சனிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பரூக் அப்துல்லா வேண்டுகோள்

‘நாடாளுமன்றத்தில் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்’ என்று அந்த யூனியன் பிரதேசத்தின் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா சனிக்கிழமை கே... மேலும் பார்க்க

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா். மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் த... மேலும் பார்க்க