செய்திகள் :

ரூ. 250 கோடியில் தரமான விதை கொள்முதல் திட்டம்

post image

விதைப் பண்ணைகள் அமைத்து தரமான விதைகளைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பயிா்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் தரமான சான்று விதைகள் அளிக்கவும் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் (2025-26) நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிா்களில் உயா் விளைச்சல் தரக்கூடிய ரகங்களின் சான்று விதைகள் ஆகியன 39,500 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

மேலும், அரசு விதைப் பண்ணைகள் மற்றும் விவசாயிகளின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து, விதைகள் கொள்முதல் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளுக்குத் தரமான சான்று விதைகளை உரிய காலத்தில் வழங்க 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் புதிதாக நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதை விற்பனை நிலையங்களும் தொடா்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு விதைகள் உரிய தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இதன்மூலம், தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பருத்தி உற்பத்திப் பெருக்கம்: தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளது. பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க, பருத்தி சாகுபடித் திட்டம் 2021-22-ஆம் ஆண்டில் இருந்து தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டிலும் (2025-26) இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும்.

அயல் நாடுகளுக்குச் செல்லும் விவசாயிகள்

அயல் நாடுகளில் உள்ள வேளாண் தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகள் அறிந்துகொள்ள வழி செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் உற்பத்தித் திறனில் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உயரிய தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய நுட்பங்களை தமிழக விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில், 3 நாடுகளுக்கும் 100 விவசாயிகள் அழைத்துச் செல்லப்படுவா் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் விளக்கம்!

தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்! மேலும் பார்க்க

அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் - ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்

ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.அதில், ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய மழை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுமுதல்(மார்ச் 16) அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது.கம்பீர சப்த முனீஸ்வரர் திருஉர... மேலும் பார்க்க

வில்வித்தை பயிற்சியாளருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்வர் உ... மேலும் பார்க்க