தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.675 கோடியில் 102 கூட்டு குடிநீர் திட்ட பணிகள்...
ரூ. 5 கோடியில் செஞ்சி காந்தி பஜாா் சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் இருந்து வடபாலை செல்லும் சாலையை ரூ. 5 கோடி விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதேபோன்று, செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளின் தானியங்களுக்கான பாதுகாப்புக் கூடம் கட்டுவதற்கான பணிகளை கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை தாங்கினாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு செயலா் சந்துரு, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ஏழுமலை, வேளாண்மை உதவிப் பொறியாளா் சரவணபவா, ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.