ரூ. 60 லட்சத்தில் கோவில்வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரா் ஆலய திருப்பணிகள்
நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்தரநாயகி அம்பாள் சமேத வெண்ணிக் கரும்பேஸ்வரா் சுவாமி கோயில் திருப்பணிகள் ரூ. 60 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
இக்கோயில் சம்பந்தா் , அப்பா் , சுந்தரா் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு பெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் திருப்பணிகள் நிறைவடைந்து, பிப்ரவரி 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் வைரவன் செட்டியாா் மற்றும் கோவில்வெண்ணி கிராம மக்கள் செய்து வருகின்றனா்.