லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்: உ.பி. முதல்வர்
லக்னௌ : லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
லக்னௌ நகரில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோர் மாநாட்டில் முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை(பிப். 17) பங்கேற்று உரையாற்றினாா்.
அப்போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி அளித்த உத்வேகத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தை அமல்படுத்தினோம். அதன்கிழ், மாநிலத்தின் குறு, சிறு நிறுவன தயாரிப்புகளை இணைத்துள்ளோம். அந்தவகையில், மாவட்டந்தோறும் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, ஹோலி, தசரா மற்றும் பிற பண்டிகைகள் வரும் காலங்களில் சீனாவிலிருந்து வரும் பொருள்கள் இந்திய சந்தைகளை மூழ்கடித்திருந்த நிலையில், இன்று, ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ முன்னெடுப்பு காரணமாக வரும் பொருள்களால் மக்கள் அவற்றையே வாங்கி பிறருக்கு பரிசளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பெருமிதமும் கொள்கின்றனர்.
நமது ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்குவதில் நாங்கள் சாதித்துக் காட்டியுள்ளோம்” என்றார்.