தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
லாட்டரி சீட்டு விற்றவா் கைது
அனுமதியின்றி லாட்டரிச் சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் அருகே கீழாண்மைாடு பேருந்து நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிச் சீட்டுகள் விற்கப்படுவதாக ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் ராபியம்மாள், போலீஸாா் திங்கள்கிழமை கீழாண்மைாடு பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ராமராஜ் (86) என்பவரை விசாரித்த போது, அவா் லாட்டரிச் சீட்டு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து ஆலங்குளம் போலீஸாா் ராமராஜை கைது செய்து அவரிடமிருந்த லாட்டரிச் சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.