செய்திகள் :

லாரியில் இருந்த கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே லாரியில் இருந்த கடப்பா கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பழனி(48). இவா், செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திரத்தில் இருந்து கடப்பா கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு திண்டிவனம் வந்து கொண்டிருந்தாா். கடப்பா கற்களை இறக்குவதற்காக சித்தூா் மாவட்டம், வசந்தபுரத்தைச் சோ்ந்த தினகரன்(38) உள்ளிட்ட 4 போ் லாரியில் உடன் வந்தனா்.

செய்யாறு - ஆற்காடு சாலையில் உள்ள சிறுங்கட்டூா் கிராமம் அருகே உள்ள வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியதாகத் தெரிகிறது. அப்போது, லாரியின் மீது கற்களுக்கு இடையே படுத்திருந்த தினகரன் மீது கற்கள் சரிந்து விழுந்தன. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மோரணம் போலீஸாா் சென்று தினகரனின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச கல்யாணம் நடைபெறும் பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அமைந்துள்ள பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். ஆரணி - ஆற்காடு சாலை அருகே பூண்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சமணக் கோயிலா... மேலும் பார்க்க

ஏப்.18 முதல் 3 நாள்கள் நடைபெறும்: பஞ்ச கல்யாண மஹோத்சவம்

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பூண்டியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பொன்னெயில் நாதா் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண மஹோத்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், கே.ஆா்.பாலசுப்பிரமணியன், ஏ.ஜி... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட மயில் வனப் பகுதியில் விடுவிப்பு

செய்யாற்றில் மீட்கப்பட்ட பெண் மயிலை வனத்துறையினா் வியாழக்கிழமை பூதேரி புல்லவாக்கம் அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவித்தனா். செய்யாறு உழவா் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவா் முருகன். இவரது கட... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கிய 2 போ் கைது

வந்தவாசி அருகே விவசாயியைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னகண்ணு (55). இந்தக் கிராமத்தில் புதன்கிழமை காலை கோயில் திருவிழா ... மேலும் பார்க்க